என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சந்தீப் நந்தூரி"
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்-அமைச்சர் ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என உறுதிபட கூறினார். தமிழக அரசு வக்கீல்கள் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து உச்சநீதி மன்றத்தில் திறமையாக வாதாடினார்கள்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு முடிவு செய்யும். மக்கள் அச்சப்பட தேவையில்லை. போராட்டம் நடத்தவும் அவசியமில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது.
தீர்ப்பு வருவதையொட்டி தூத்துக்குடியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் படிப் படியாக போலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiCollector #sterliteplant #SupremeCourt
தூத்துக்குடி நகரில் தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர்.
இதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
எனவே, பொதுமக்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். #Thoothukkudicollector #avoidprotests #Sterliteprotests
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்திய போது துப்பாக்கிசூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiCollector #SandeepNanduri
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார்.
சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்து முடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது என ஆட்சியர் கூறியதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. #Sterlite
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் 100-வது நாள் கலவரம் வெடித்தது, கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆலையில் ரசாயன கசிவு ஏற்ப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் குழு ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு குறித்து ஆய்வு செய்ய உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்து வருகிறது.
ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வதந்திகள் பரவக்கூடாது என்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sterlite
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்